ஆறு வயதில் இருந்து காளைகளை வளர்க்கத் தொடங்கினாலும், 58 வயதில் தனக்கு பெருமை சேர்த்திருக்கிறது புல்லட் காளை என்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர். அலங்காநல்லூரை அதிரவைத்த புல்லட் காளை உரிமையாளரின் நெகிழ வைக்கும் கதையை தெரிந்துகொள்வோம்.
புதுக்கோட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கைக்குறிச்சி கிராமம். அலங்காநல்லூரையே அதிரவைத்த புல்லட் காளை மூலம் இந்த கைக்குறிச்சி கிராமம் வெகுவாக பிரசித்திபெற்றுவிட்டது. இந்த காளைக்கு சொந்தக்காரர் தமிழ்ச்செல்வன்; கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளை என்றால் அனைத்து வாடிவாசலிலும் பிரபலம். 6 வயதில் ஜல்லிக்கட்டு காளைகளை ஆசையுடன் வளர்க்கத்தொடங்கிய இவர், 58 வயதாகும் இப்போதும் 27 காளைகளை வளர்க்கிறார்.
இவற்றில் ஒன்றாக 2017-ல் வாங்கியதுதான் புலிக்குளம் ரகத்தைச் சேர்ந்த இந்த காளை. 2018 விராலிமலை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து ஆட்டம் காட்டிய காளை முதல் இடத்தை பிடித்து புல்லட்டை பரிசாக பெற்றதில் இருந்து புல்லட் காளை என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் யாரும் தொடமுடியாத அளவுக்கு மாடுபிடிவீரர்களை அதிரவைத்து திரும்பியிருக்கிறது புல்லட் காளை. புல்லட் காளையின் ஆட்டத்தால் தமிழ்ச்செல்வன் மட்டுமின்றி கைக்குறிச்சி கிராம மக்களும் புதுக்கோட்டை மாவட்ட மக்களும் பூரிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சூரியூரில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டிலும் தமிழ்ச்செல்வனின் கரிகாலன் காளை முதல் பரிசை தட்டிச்சென்றது. காளைகள் மட்டுமின்றி, நாய்கள், பந்தய புறாக்கள், கிளிகள், குதிரைகளை வளர்த்துவருகிறார் தமிழ்ச்செல்வன். என்றாலும், காளைகளை வளர்ப்பதிலும் அனைத்து ஜல்லிக்கட்டிலும் ஊர் பெயரை நிலைநாட்டிவருவதுமே தனக்குப் பெருமை என்கிறார் தமிழ்ச்செல்வன்
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai