தனது வீட்டில் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை பணியாளர் திருடியதாக நடிகை நிக்கி கல்ராணி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்தவரை பணியாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் உடன் ராஜவம்சம் என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் தங்கி வரும் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ராயப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, வீட்டு வேலை பார்க்கும் தனுஷ் சந்தேகத்திற்கு இடமாக மறைத்து சில பொருட்களை எடுத்துச் செல்வதைக் கண்டதாகும் தெரிவித்துள்ளார். பின் வீட்டில் சோதனை செய்தபோது விலை உயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் துணிகள் பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே கடந்த 13-ஆம் தேதி தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் தந்தை இருவரும் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்தடைந்தனர். தன் மகனை காணவில்லை என அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தன் மகன் இருக்கும் இடத்தையும் வேலைப்பார்க்கும் நிறுவனத்திலும் விசாரணை செய்து விட்ட பிறகுதான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் தனுஷ் பொருட்களை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. விசாரணை மேற்கொண்டதில் தனுஷ் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாகவும், கோயம்புத்தூரில் ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!