தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், இன்று அது சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தினம் கொரோனாவிலிருந்து சுமார் 15,036 பேர் மீண்டுள்ளனர். அதேநேரம், 29 பேர் கொரோனாவினால் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இன்று பாதிப்பு கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து, சுமார் 1,61,171 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கையானது 29,87,254 என உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,89,045 என்றும், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,038 என்றும் ஆகியுள்ளது.
இப்படியாக இன்றைய தினமும் 5 ஆம் நாளாக 23,000 க்கும் மேல் பதிவாகி உள்ளது. சென்னையில் 28.7 ஆக பாசிட்டிவிட்டு பதிவாகியுள்ளது. நேற்று 28.7 என்றிருந்த நிலையில், இன்று அதேபோலவே உள்லது. தமிழகத்தின் பாசிட்டிவிட்டி ரேட், நேற்று 17 என்றிருந்த நிலையில் அது இன்று 16.7 என குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஐசியூவில் 833 பேர் உள்ளனர்.
பாதிப்பு அதிகம் உறுவாகியிருப்பது, இன்றும் சென்னையில்தான். அந்தவகையில் சென்னையில் இன்று 8,305 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கோவை (2228), செங்கல்பட்டு (2143) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்தி: தமிழ்நாட்டில் கடந்த இரு வாரத்தில் இரட்டிப்பான ஐ.சி.யூ. நோயாளிகள் எண்ணிக்கை
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!