‘வலிமை’ படத்தினை வரும் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக படத்தினை ஒத்திவைப்பதாக அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர். இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இன்னும் ‘வலிமை’ வெளியீட்டுத் தேதியை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், ‘வலிமை’ படத்தினை வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையையொட்டி வெளியாவதால் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தை, அதற்கு முன்னரே மார்ச்சில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ’பீஸ்ட்’ படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி