ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் தொடர்பான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தங்கள் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால். முன்னதாக ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வார்கள் என சொல்லியிருந்தார் அவர்.
Punjab CM face will be announced tomorrow at 12pm: AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/4oX3NBAiZI
— ANI (@ANI) January 17, 2022Advertisement
117 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது அக்கட்சி 12 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ளது. அந்த கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளானர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!