வேலுநாச்சியாரையும், வஉசியையும் நிராகரித்து விட்டு கோட்சேக்களுக்கும், கோல்வார்கர்களுக்கும் அனுமதி கொடுக்க உள்ளீர்களா என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிப்பு என தெரிய வந்துள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்,
தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சியும், மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்? குடியரசுதின விழாவில் இதையெல்லாம் எடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர்
கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி