கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று (16.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, நேற்று காலை 6 மணி முதல் இன்று (17.01.2022) அதிகாலை 5 மணி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முழு ஊரடங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள், 27 ஆட்டோக்கள் மற்றும் 25 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (16.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 3,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7,89,400 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதமும் வசூலிக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நாட்களிலும், சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai