நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில், தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் வாரத்தில் 3 நாட்களுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலமாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 9 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி நீடித்து வந்த நிலையில், இன்று முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை சரிவு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையால் முட்டை விற்பனை குறைந்துள்ளது. அதே போல் பிற மண்டலங்களில் முட்டை விற்பனை குறைந்தாகவும் இதனால் அதிகளவு முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறையவே வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?