Published : 17,Jan 2022 09:01 AM
12 முதல் 15 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி இறுதியில் தொடக்கம்

12 முதல் 15 வயது சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி போடப்படும் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
தற்போது 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், இதுவரை 45 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் அவர்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், பின்னர் பிப்ரவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதினருக்கு 2ஆவது தவணை தடுப்பூசி போடும் பணி முடிவடையும் எனவும் என்.கே.அரோரா கூறியுள்ளார்.
இதன் பின்னர், பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் 12முதல் 15வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: புனே: ஓட்டுநருக்கு வலிப்பு - 10 கி.மீ தூரம் பேருந்தை இயக்கிய பெண் பயணி