[X] Close

பசுங்கன்றுக்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்த விஜயகாந்த்

DMDK-leader-named-new-born-cow-as-Atchaya

தங்கள் வீட்டு பசு, கன்று ஈன்றதை புகைப்படத்தோடு பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அந்த கன்றுக்குட்டிக்கு அவர் அட்சயா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், “எங்கள் வீட்டு லட்சுமி (பசு), இன்று பசுங்கன்றை ஈன்றது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்” என்று கூறியுள்ளார்.


Advertisement

தான் வீட்டில் வளர்க்கும் பசுவுக்கு லட்சுமி என்று பெயர் சூட்டியிருந்த விஜயகாந்த், அந்த பசு ஈன்ற கன்றுக்குட்டிக்கு அட்சயா என்று பெயர் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில், விஜயகாந்தும், அவர் மனைவி பிரேமலதாவும் கன்றுக்குட்டியை கொஞ்சுகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close