கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 22-ம் தேதி வரை மூவாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த தொற்று, தற்போத ஆயிரத்தின் மடங்காக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி 16 ஆயிரத்தை கடந்த தொற்று, 16-ஆம் தேதி இன்று 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை 59,314 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 18,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் இதுவரை நோய் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து 50,832ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 99.69 சதவீதம் பேர் முதல் தவணையும் 82 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், கொரோனா பரவலின் வேகத்தாலும், தினம் தினம் ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!