Published : 16,Jan 2022 01:13 PM
5 மாநில தேர்தல்: பரப்புரைக்கான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பரப்புரைக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக அதிகளவில் மக்கள் கூடும் வகையிலான தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பரப்புரைக்கான தடையை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள் அரங்குகளில் 300 பேர் வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமர்ந்து பரப்புரை கூட்டங்களை நடத்தலாம் எனவும் கட்டுப்பாட்டில் தளர்வு அளித்துள்ளது. தேர்தல் பரப்புரை கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை மாநில அரசுகள் முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: டெல்லி குடியரசு தின விழா - 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி