[X] Close

குடியிருப்பு பகுதியில் தீ விபத்து: 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

fire-accident-in-thiruvarur-burned-9-houses

திருவாரூரில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவாரூர் அருகே வார்குறிச்சி நகர் பகுதியில் ‌வசிக்கும் செல்வி‌ என்பவரது வீட்டில் திடீரென தீப்பற்றியது. அதனைத்தொடர்ந்து ஒன்பது வீடுகளுக்கு தீ பரவியுள்ளது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே வந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்தில் கல்வி சான்றிதழ்கள் மற்றும் பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் மக்கள் காயமின்றி தப்பினர். 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்திற்கு மின் கசிவு காரணம் என்றும் கூறப்படுகிறது. ‌இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close