சென்னையில் தெரு வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,591 தெருக்களில் 3-5 என்ற எண்ணிக்கையில் கோவிட் தொற்று நோயாளிகள் உள்ளனர் என்றும், அதில் 583 தெருக்களில் 6-10 நோயாளிகளும் 280 தெருக்களில் 10-25 நோயாளிகளும் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தெருவில் கூட 25க்கும் மேற்பட்டு கோவிட் தொற்று நோயாளிகள் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இவையன்றி சென்னையில் 5 கோவிட் சிகிச்சை மையங்களில் மொத்தம் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி சார்பில் 22,600 ரூபாயும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 10,02,900 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தமாக 7,78,96,395 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தடுப்பூசி நிலவரம் எந்தளவுக்கு உள்ளது என்பது குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 94% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்; 73% பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளனர்; சென்னையில் இதுவரை 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட சிறார்களில் 66% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது.
தொடர்புடைய செய்தி: ஊரடங்கு வழிகாட்டுதலை பின்பற்றாதால் ரூ.10 லட்சம் வரை வசூலான அபராதம்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!