கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் காவல்துறை வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காணும் பொங்கல் என்பதால் சென்னையின் கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கால் ஆள்நடமாட்டமின்றி மெரினா கடற்கரை சாலை காணப்படுகிறது. 2-வது ஆண்டாக காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லாமல் களை இழந்து காணப்படுகிறது கடற்கரை சாலை.
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்குள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன தணிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறை உதவி மையம் 9498181239 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறையின் 9498181239 என்ற உதவி மைய எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறு சென்னை காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
இதையும் படிக்க: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் காவல்துறை வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!