பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்-கின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, லோயர் கேம்ப்பில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு நீராதாரமாக திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை கடந்த 1885 ஆம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் என்பவரால் கட்டப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை பென்னி குவிக் பிறந்த 1841 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதியன்று 'பென்னிக்குவிக் பொங்கல்'லாக தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து இந்த ஆண்டும் பென்னிகுவிக்கின் 181-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை அடுத்து, தேனி மாவட்டம் குமுளி அடிவாரம் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அரசு விழா நடைபெற்றது.

நினைவு மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பென்னிகுக் உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளீதரன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணகுமார், மகாராஜன், தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் மற்றும் உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் அவரது உருவப்படத்திற்கும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக், பாஜக, கம்யூனிஸ்ட், மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், மலைச்சாரல் விவசாயிகள் சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com