[X] Close

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற டிடிவி அணி திட்டம்

TTV-Dhinakaran-team-new-Plan

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முனைப்பு காட்டி வரும் நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற டிடிவி தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுக்குழுவை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கூட்டுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பொதுக்குழு கூடும்போது சசிகலாவை நீக்க முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை தினகரன் அணியினர், எடுத்து வருகின்றனர். இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் டிடிவி தினகரன் அணியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதிமுக செயற்குழுவில் 250 உறுப்பினர்களும், பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 780 உறுப்பினர்களும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழு கூட்டப்படவேண்டும் என்பது அதிமுக கட்சி விதியாகும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close