Published : 01,Feb 2017 10:24 AM

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: சட்ட முன்வடிவு நிறைவேறியது

NEET-ordinance-passed-in-TN-Assembly

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு முறையில் நீட் தேர்வைத் தவிர்த்து பழைய முறையே தொடர்வதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த சட்டத்தின் மூலம் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். இதையடுத்து மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்கும்படியான சட்ட முன்வடிவினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அந்த சட்ட மசோதா விவாதத்துக்குப் பின்னர் இன்று ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த சட்ட மசோதா நீட் தேர்வின்றி பழைய முறையையே பின்பற்றி 12ஆம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வகை செய்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்