Published : 13,Jan 2022 04:44 PM

மீண்டும் சரிந்த இந்திய அணி - வெகுண்டெழுந்து பவுண்டரிகளை விளாசி தள்ளிய ரிஷப் பண்ட்

Indian-Wicket-Keeper-Batsman-Rishabh-Pant-saves-team-India-from-fall-in-Cape-Town-Test-Match-with-Indian-Skipper-Virat-Kohli-against-South-Africa

கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 58 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே என நால்வரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இனி இந்தியா இந்த போட்டியில் வெல்வது கடினம் என்ற நிலையில் களம் இறங்கினர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். அதளபாதாளத்தில் சரிந்து கிடந்த இந்திய அணியை தனது அதகளமான இன்னிங்ஸ் மூலம் மீட்டெடுத்தார் ரிஷப் பண்ட். 

image

அவருக்கு கேப்டன் விராட் கோலி சிறப்பான ஒத்துழைப்பு கொடுக்க 58 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணிக்கு எழுச்சி கொடுத்ததோடு தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் பண்ட். 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் இதில் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது போன்று பந்துகளை அதிகம் வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தார். 

மூன்றாம் நாள் உணவு நேர முடிவின் போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆட்டத்தில் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் கோலி 127 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை எடுத்துள்ளார். தற்போது களத்தில் பண்ட் மற்றும் கோலி உள்ளனர். 

இந்த தொடரில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இதுவரையில் மொத்தம் 41 நோ-பால் வீசியுள்ளார். அவருக்கு பவுலிங்கில் சரியான ரிதம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த விவாகரத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் பயிற்சியாளர் ரபாடாவுடன் பேச வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்