உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிற மாநில தலைவர்கள் களமிறங்கியுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அதீத முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேசம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு பிற மாநிலங்களை சேர்ந்த பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். சரத்பவார் வகுத்துள்ள இந்த வியூகம் அகிலேஷ் யாதவுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விரைவில் சமாஜ்வாதி கட்சியின் கரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என அக்கட்சியின் தலைவர்கள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சிவசேனா கட்சி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. சிவசேனா கட்சிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குகளை பிரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும் என கருதப்படுகிறது. அதேபோல், தெலங்கானாவை தளமாக கொண்டு செயல்படும் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளது.
இப்படி பிற எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் பின்னடைவை சந்திக்கும் என அந்தக் கட்சித் தலைவர்கள் வருந்துகின்றனர். பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே முடியும் என பிற எதிர்க்கட்சிகள் கருதுவது காங்கிரஸ் கட்சியில் உள்ள நம்பிக்கையை மேலும் பலவீனமாக்குகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை கைப்பற்ற தவறினால், 2024 பொதுத்தேர்தல் மற்றும் பிற மாநில சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெறுவது மேலும் கடினமாகிவிடும் என்று கருதப்படுகிறது
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்