மத்திய பிரதேசம் மாநிலத்தில் காவலர் ஒருவர் தன் பேண்டில் இருந்த சேற்றை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் ரேவா பகுதியில் பெண் காவலர் மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறுதலாக சேற்றை வாரியிறைத்தாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான பெண் காவலர், சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, தனது பேண்டில் இருந்த சேற்றை சுத்தம் செய்யும் படி கட்டாயப்படுத்தியுள்ளார். சுத்தம் செய்து முடித்ததும், அந்த நபரை அறைந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
मध्य प्रदेश के रीवा में एक महिला पुलिसकर्मी ने सिरमौर चौक के पास पहले युवक से पैंट साफ कराई. फिर उसे जोरदार थप्पड़ जड़ दिया. बाइक हटाते हुए महिला पुलिसकर्मी के पैंट में कीचड़ लग गया था @ndtv @ndtvindia @DGP_MP @drnarottammisra pic.twitter.com/m0hdSJ2mrZ
— Anurag Dwary (@Anurag_Dwary) January 12, 2022Advertisement
வீடியோ வைரலானதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர், ஊர்காவல்படையைச் சேர்ந்த பெண் காவலர் சசிகலா என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி. ஷிவ்குமார் கூறுகையில், 'இந்த சம்பவம் உண்மையில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக யாரேனும் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்''என்று தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மேமாதம் மாஸ்க் அணியாத பெண்ணை, காவலர் ஒருவர் தாக்கி தரதரவென இழுத்துச்சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்