Published : 12,Jan 2022 07:41 PM

’3 வீரர்களை தேர்வு செய்ய அதிகபட்சம் ரூ.33 கோடி’ - லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு நிர்ணயம்

Lucknow-and-Ahmedabad-IPL-Teams-can-spend-maximum-33-crore-rupees-to-pick-3-players-ahead-of-IPL-2022-mega-Auction-says-report--

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் புதிதாக உதயமாகி உள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்ந்து களம் காண உள்ளன. இந்த நிலையில் அவ்விரு அணிகளும் தங்கள் அணி சார்பாக அதிகபட்சம் 33 கோடி ரூபாய் வரை செலவு செய்து மூன்று வீரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் சாய்ஸ் வீரருக்கு 15 கோடி ரூபாயும், இரண்டாவது சாய்ஸ் வீரருக்கு 11 கோடி ரூபாயும், மூன்றாவது சாய்ஸ் வீரருக்கு 7 கோடி ரூபாயும் இந்த இரு அணிகளும் செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

அதுவே அணிகள் இரண்டு வீரர்கள் மட்டுமே பிக் செய்ய விரும்பினால் 14 மற்றும் 10 கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிகளின் விருப்பம் ஒரே ஒரு வீரராக இருக்கும் பட்சத்தில் அவரை பிக் செய்ய அதிகபட்சம் 14 கோடி ரூபாய் வரை மட்டுமே பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதியன்று பெங்களூருவில் 2022 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை வரும் 22-ஆம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சமர்பிக்க வேண்டி உள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்