[X] Close

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே விலகல்

Andy-Murray-withdraws-from-US-Open-because-of-ongoing-hip-injury

காயம் காரணமாக நாளை தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னணி வீரர் ஆன்டி மூர்ரே விலகியுள்ளார்.


Advertisement

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், முன்னணி வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, காயம் காரணமாக விலகியுள்ளார். இடுப்புப் பகுதியில் ‌ஏற்பட்ட காயம், முழுமையாக குணமடையாததால், தம்மால் போட்டியில் பங்கேற்க இயலாது என அவர் கூறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள முர்ரே, விம்பிள்டன் தொடருக்குப்‌ பிறகு, எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக, ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனில் பங்கேற்கப் போவதில்லை என நோவக் ஜோகோவிச், வாவ்ரிங்கா, நிஷிகோரி ஆகிய முன்னணி வீரர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகியோரில், ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close