சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி அங்கு சென்றபோது, விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அவர் அங்கிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலே திரும்பினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், இதுகுறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை ட்விட்டரில் டேக் செய்து, நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிந்திருந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், தேசிய மகளிர் ஆணையம், நடிகர் சித்தார்த்க்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா டிஜிபிக்களிடம் புகார் அளித்திருந்தது.
நடிகர் சித்தார்த்தின் கருத்துக்கு, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்புக் கோரியிருந்தார். ட்விட்டரில் சாய்னாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே.
நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை, என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் மலிவான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே பெண்ணியவாதிகளின் ஆதரவாளர். ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்னையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான்” இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் “சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. முதலில் என்னைப் பற்றி ஏதோ சொன்னார். பிறகு மன்னிப்புக் கேட்டார். சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை. ட்விட்டரில் நான் ஏன் வைரல் ஆனேன் என்றும் தெரியவில்லை. அதைக்கண்டு ஆச்சர்யமடைந்தேன். சித்தார்த்தின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது. பெண்களை இதுபோன்று வசைபாடக்கூடாது. ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!