கொரோனாவில் இருந்து குணமானார் த்ரிஷா

கொரோனாவில் இருந்து குணமானார் த்ரிஷா
கொரோனாவில் இருந்து குணமானார் த்ரிஷா

நடிகை த்ரிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், ''நெகட்டிவ்' என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. இப்போது நான் 2022 இல் இயங்க நான் தயாராகிவிட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com