Published : 11,Jan 2022 10:14 PM

'ரிவிவ்யூ வாய்ப்பையும் ஏன் வீணடிக்கிறீர்கள்’ - இணையத்தில் மீண்டும் ட்ரோல் ஆகும் ரகானே!

Why-are-you-wasting-review-opportunity-Indian-Test-Cricket-senior-batsman-Rahane-was-trolled-in-internet-over-his-DRS-Decision-against-South-Africa

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரஹானே இணைய வெளியில் மீண்டும் ட்ரோல் செய்யப்பட்ட வருகிறார். வழக்கமாக மோசமான ஆட்டம் காரணமாக அவரை ரசிகர்கள் விமர்சிப்பார்கள். ஆனால் இந்த முறை அவரது DRS ரிவிவ்யூ முடிவுக்காக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 9 ரன்களில் அவுட்டாகி உள்ளார் ரஹானே. 

இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மளமளவென ஒருபக்கம் விக்கெட்டுகளை இழக்க கேப்டன் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ரஹானே, 12 பந்துகளை சந்தித்து அவுட்டானார். அவர் எதிர்கொண்ட 12-வது பந்தை ஆப்-ஸ்டம்ப் திசையில் ரபாடா வீசி இருந்தார். அதை எதிர்கொண்ட ரஹானேவின் பேட்டில் பட்ட பந்து கீப்பரிடம் தஞ்சமடைந்தது. அதற்கு தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுத்தார். 

உடனடியாக அந்த முடிவை எதிர்த்து ரஹானே, DRS ரிவிவ்யூ எடுத்தார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. அவர் அவுட்டானது மட்டுமல்லாது இந்திய அணியின் ரிவிவ்யூ வாய்ப்பையும் அவர் வீணடித்தார். அதன் காரணமாக அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். 

இதில் ரிவிவ்யூ செய்ய என்ன உள்ளது என்பதில் தொடங்கி ரகம் ரகமாக ரஹானேவை பங்கம் செய்து வருகிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.  

image

இந்திய அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. தற்போது தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது. கேப்டன் கோலி 201 பந்துகளில் 79 ரன்களை எடுத்து அவுட்டானார். மீண்டும் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் கோலி.

பின்னர், தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது. எல்கர் விக்கெட்டை சாய்த்தார் பும்ரா.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்