Published : 11,Jan 2022 05:46 PM
கர்நாடகா: கடன் தராத கோபத்தில் வங்கிக்கு தீ வைத்த இளைஞர் கைது
கர்நாடகாவில் கடன் தராத கோபத்தில் ஒரு நபர் வங்கிக்கு தீ வைத்தார். ஹவேரி பகுதியை சேர்ந்த ஒரு நபர் அங்குள்ள வங்கிக் கிளையில் கடன் கேட்டு அணுகியுள்ளார். அந்த நபர் அளித்த ஆவணங்கள் சரியாக இல்லாததால் கடன் தர முடியாது என வங்கி மேலாளர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் வங்கிக்கு தீ வைத்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த காவல் துறை அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.