உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து பா.ஜ.க.வில் இருந்து, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகி வருவதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க தனது ஆட்சியை 2-வது முறையாக தொடர்ந்து தக்கவைக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதேபோல், மீண்டும் ஆட்சியை பிடிக்க, சமாஜ்வாதி கட்சியும் முனைப்பில் உள்ளது.
இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளநிலையில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சராக கருதப்படும் சுவாமி பிரசாத் மவுர்யா இன்று ராஜினாமா செய்துவிட்டு, சாமாஜ்வாதி கட்சியில் இணைந்திருந்தார். இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும்நிலையில், அவருடன் மேலும் 3 பா.ஜ.க. எம்எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, பில்ஹார் தொகுதி எம்.எல்.ஏ. பாஹ்வதி சாகர், தில்ஹர் தொகுதியைச் சேர்ந்த ரோஷன் லால் வெர்மா மற்றும் பந்தா தொகுதியைச் சேர்ந்த பிரிஜேஷ் பிரஜபதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
மூத்த அமைச்சரான சுவாமி பிரசாத் மவுர்யா ராஜினாமா செய்தபோதே, அவருடன் சேர்ந்து இன்னும் சில எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரிடையே, மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்படும் சுவாமி பிரசாத் மவுர்யா, பா.ஜ.க. கட்சியிலிருந்து விலகியது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், சாமாஜ்வாதி கட்சி இதன்மூலம் பலம் வாய்ந்த கட்சியாக மாறி வருகிறது. இதற்கிடையில் மேலும் 13 எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவார்கள் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தார். அதன்படி 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10-ம் தேதி துவங்கி, மார்ச் 7-ம் தேதிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?