மதுரையில் ட்ரெண்ட் ஆகிவரும் 'மஞ்சப்பை பரோட்டா'

மதுரையில் ட்ரெண்ட் ஆகிவரும் 'மஞ்சப்பை பரோட்டா'
மதுரையில் ட்ரெண்ட் ஆகிவரும் 'மஞ்சப்பை பரோட்டா'

மதுரையில் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பை வடிவில் தயாரிக்கப்படும் பரோட்டா பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நெகிழிப் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில், மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக, மதுரையைச் சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மஞ்சப்பை பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளார்.

கைப்பிடியுடன் கூடிய பையின் வடிவத்தில் பரோட்டாவை தயாரித்து விற்பனை செய்கிறார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவருக்கும் மஞ்சப்பையைக் கொடுத்து முகக்கவசத்தையும் இலவசமாகக் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com