Published : 10,Jan 2022 10:13 PM

கேப்டவுன் டெஸ்டில் ‘சாஹா உள்ளே! பண்ட் வெளியே!’ - சாஹாவின் ட்வீட் பற்றவைத்த நெருப்பு

Rishabh-Pant-out-and-Saha-in-for-Cape-Town-Test-in-the-Playing-eleven-against-South-Africa-because-of-Saha-s-tweet-triggered-twitter--

இந்திய கிரிக்கெட் அணி நாளை கேப்டவுன் நகரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்று போட்டிகள் அடங்கிய தொடரை வெல்லும். தற்போது 1 - 1 என இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் சாஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட் விவாதப் பொருளாகியுள்ளது. 

சாஹா பகிர்ந்த இரண்டு ட்வீட் தான் அனைத்திற்கும் காரணம். அதுவும் நாளைய போட்டியில் ஆடும் லெவனில் சாஹாவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அந்த ட்வீட்கள் ஏற்படுத்தி உள்ளனர். 

அப்படி என்ன ட்வீட் செய்தார் சாஹா?

முதல் ட்வீட்டில் ‘ஹலோ கேப்டவுன்’ என கேப்ஷன் கொடுத்து அந்த படத்தை பகிர்ந்துள்ளார். அடுத்த ட்வீட்டில் ‘வொர்க் மோட் ஆன்’ என கேப்ஷன் கொடுத்து கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்திய அணி கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்க நாட்டில் முகாமிட்டுள்ள நிலையில் முதல் முறையாக பயிற்சி மேற்கொள்ளும் படங்களை சாஹா பகிர்ந்துள்ளார். இதுதான் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்ய காரணம். 

மறுபக்கம் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் 8, 34, 17, 0 என சொற்ப ரன்களில் அவுட்டாகி உள்ளதால் சாஹா ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி உள்ளது. 

அதை கவனித்த ரசிகர்கள் பலரும் தங்களது ரியாக்ஷன்கள் இங்கே... 

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்