யாரெல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? - தமிழக சுகாதாரத்துறை தகவல்

யாரெல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? - தமிழக சுகாதாரத்துறை தகவல்
யாரெல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? - தமிழக சுகாதாரத்துறை தகவல்

கோவிட் பரிசோதனை யார் யாருக்கெல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவலின்படி கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியவர்கள்:

  • காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி இருப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • தொற்று உறுதி செய்யப்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்களை பொறுத்தவரை அறிகுறிகள் உள்ளோர்; 60 வயதுக்கு மேற்பட்டோரில் இணைநோய் உடையோர் அல்லது அறிகுறி உடையோர்; கர்பிணி தாய்மார்கள், நோய் எதிர்ப்பு குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதிக்கப்பட வேண்டும்.

மற்றபடி,

  • கோவிட் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை.
  • வீட்டுத்தனிமை அல்லது தனிமைபடுத்தப்படும் மையங்களில் இருந்து குணமானவர்கள், மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோர், முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டபிறகே வீடுதிரும்ப வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com