ஆசிய அளவில் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை முந்தியுள்ளார் மெக் டொனால்ட் துரித உணவகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்சர் என சொல்லப்படும் Binance நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Changpeng Zhao தான். சுருக்கமாக அவரை CZ என அழைப்பது வழக்கம்.
44 வயதான அவரது சொத்து மதிப்பு 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானியை அவர் முந்தியுள்ளார். இது கூடு மதிபீட்டளவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரது அசல் சொத்து மதிப்பு இதைவிட கூடுதலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு Binance நிறுவனம் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
யார் இந்த CZ?
சீன நாட்டை சேர்ந்தவர் CZ. 12 வயதில் அவரது குடும்பம் கனடாவில் குடியேறி உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டம் முடித்துள்ளார். தனது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் டீன் ஏஜ் பருவத்தில் பல்வேறு வேலைகளை செய்துள்ளார். அப்போதுதான் அவர் மெக் டொனால்ட் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். மென்பொருள் கட்டமைப்பாளராக பணியாற்றி வந்த அவர் கிரிப்டோ கரன்சி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த 2017-இல் Binance நிறுவனத்தை அவர் நிறுவியுள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்