Published : 10,Jan 2022 05:12 PM

கார்களின் விலையை உயர்த்தியது கியா நிறுவனம்!

Kia-announced-price-hike-in-Indian-Market-for-its-various-Car-Models-from-Seltos-Sonet-and-Carnival

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவன தயாரிப்பு கார் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளன. இந்த சூழலில் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கியா நிறுவனமும் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளன. 

image

அந்த வகையில் கியா செல்டோஸ், கியா சோனட் மற்றும் கியா கார்னிவல் கார்களின் விலை உயர்ந்துள்ளன. குறைந்தபட்சம் 4000 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 54000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கியா கார்கள் 6.95 லட்சம் முதல் 34.49 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் கியா Carens காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது கியா நிறுவனம். வரும் ஜனவரி 14 முதல் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்