வாரணாசியில் உள்ள காசி விஷ்வநாதர் ஆலயத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு ஜூட் வகை காலணிகளை பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
சுமார் 100 ஜோடி காலணிகளை பிரதமர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “காசி விஷ்வநாதர் ஆலய பணியாளர்கள் அனைவரும் வெறும் காலில் பணிசெய்வதை சமீபத்தில் பிரதமர் மோடி கண்டுள்ளார். கோயில்களுக்குள் காலணி அணியக்கூடாது என்பதால், அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இவ்விஷயத்தில் அங்கு பூஜை செய்யும் பொதுமக்கள் தொடங்கி, பூஜிக்கும் நபர்கள், செக்யூரிட்டிகள், கோயிலை சுத்தப்படுத்தும் பணியிலுள்ளோர் என பலரும் செருப்பு அணியாமல்தான் உள்ளே இருக்கின்றனர்.
இவர்களை மதிக்கும் வகையிலும், இவர்கள் கடுங்குளிரில் வெறும் காலுடன் வேலைகள் செய்வது அவர்களது உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று கருதியும் பிரதமர் மோடி 100 ஜோடி ஜூட் வகை காலணிகளை வழங்கியுள்ளார்” எனக்கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமரின் சொந்தத் தொகுதியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.
கங்கை நதிக்கரையில் இருந்து கோயிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்தி: கொரோனா பரவல் அச்சம் - பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?