கொரோனா பரவல் அச்சம் - பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து

கொரோனா பரவல் அச்சம் - பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து
கொரோனா பரவல் அச்சம் - பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து

கொரோனா பரவல் அதிகமிருப்பதால், ஜனவரி 12ம் தேதி நடக்கவிருந்த பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்தாகியுள்ளது.

ஏற்கெனவே பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணமும், மதுரையில் பாஜக நடக்கவிருந்த ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிரதமரின் தமிழக பயணம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்றை தினம் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 12,000-ஐ கடந்து பதிவாகியிருந்ததாலும், இனி வரும் நாள்களில் இன்னும் பாதிப்பு உறுதியாகலாம் என்பதாலும் பிரதமரின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

அன்றைய தினம் பிரதமர் தொடங்கி வைப்பதாக இருந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை, காணொலி முறையில் பிரதமர் திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டடத்தையும் பிரதமர் திறக்கிறார். இந்த தமிழாய்வு நிறுவனம், தற்போது சென்னை தரமணியில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com