Published : 10,Jan 2022 12:35 PM

கொரோனா கட்டுப்பாடுகளால் முடங்கிப்போன பூ வியாபாரம் - வேதனையில் விவசாயிகள்

Cuddalore-Farmers-are-in-sad-as-flower-sale-goes-down-in-corona-lockdown

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஏக்கர் கணக்கில் பறிக்கப்பட்ட பூக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக, குப்பையில் கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், அதனை நம்பி வாழும் மலர் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கர் கணக்கில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சம்பங்கி, ரோஜா, விரிச்சிப்பூ, மல்லிகை, காக்காட்டான் பூ உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வரும் மலர் விவசாயிகள், கொரோனா கட்டுப்பாடுகளால் அவற்றை விற்பனை செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பூக்கள் அழுகி செடிகள் பாதிக்கும் என்பதால் கூலிக்கு ஆள்வைத்து பூக்களை பறிக்கின்றனர். இப்படி பறிக்கப்படும் பூக்களை, விற்பனை செய்யமுடியாமல் குப்பைகளில் வீசுவதாக மலர் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

image

கொரோனா கட்டுப்பாடுகளால் பூக்கள் விற்பனை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு பூஜைகளுடன் நடப்பட்ட முகூர்த்தக்கால்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்