[X] Close

இந்தியாவில் புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா பாதிப்பு - நேற்றைவிட 12.6% அதிகரிப்பு

கொரோனா வைரஸ்

India-registers-179723-new-cases-in-the-last-24-hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனாவால் 1,59,632 பேர் பாதிக்கப்ட்டனர். இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 12.6 சதவீதம் அதிகமாகும்.

image


Advertisement

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,57,07,727 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46,569 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி - முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close