சர்வதேச செஸ் போட்டி: கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 14 வயது வீரர்

சர்வதேச செஸ் போட்டி: கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 14 வயது வீரர்
சர்வதேச செஸ் போட்டி: கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 14 வயது வீரர்

சென்னையைச் சேர்ந்த 14 வயதே ஆன பரத் சுப்பிரமணியம், சர்வதேச சதுரங்கப் போட்டித் தொடரில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் 73 ஆவது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.

இத்தாலியில் உள்ள கட்டோலிகா நகரில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் பரத் சுப்பிரமணியம் பங்கேற்றார். 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், ஆறில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒரு டிரா என 6.5 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பெற்றார். இதே அளவில் புள்ளிகளைப் பெற்ற பிற நான்கு வீரர்களுடன், பரத் சுப்பிரமணியம் ஏழாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 14 வயதேயான பரத் சுப்பிரமணியம், தனது சிறப்பான காய் நகர்த்தல்களால் 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடரில் 11 ஆவது இடத்தையும், கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த தொடரில் 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இத்தாலி தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த சாதனைகளால் பரத் சுப்பிரமணியம், இந்தியாவின் 73 ஆவது கிராண்ட் மாஸ்டராகியுள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றுள்ளார். இத்தாலி சதுரங்கப் போட்டியில், மற்றொரு இந்திய வீரரான லலித் பாபு, ஏழு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com