பி.சி.சி.ஐ.யை பொறுத்தவரையில் ஐபிஎல் போட்டிகளை உள்நாட்டில் நடத்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் இப்போது ஏலத்தை நடத்தி முடிப்பதில் வாரியம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடருக்கான மெகா ஏலம் பிப்ரவரி மாதமும், ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த வருடமும் ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) பொறுத்தவரையில் ஐபிஎல் போட்டிகளை உள்நாட்டில் நடத்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் இப்போதைக்கு, ஏலத்தை நடத்தி முடிப்பதில் வாரியம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2022 அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஏப்ரல் தொடக்கத்தில் சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் நடைபெறும் நாட்களிலும் கொரோனா அதிகரித்துக் காணப்படும் பட்சத்தில், வெளிநாட்டில் ஐபிஎல் நடத்துவது உள்ளிட்ட 'பிளான் பி' குறித்து அந்த நேரத்தில் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் மாநில அரசுகள் என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன என்பதையும் அப்போதுதான் பார்க்க வேண்டும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஐபிஎல் 2021 போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேப்டவுனில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix