Published : 27,Aug 2017 03:18 AM

கட்சராயன் ஏரியைப் பார்வையிடுகிறார் ஸ்டாலின்

Stalin-visit-katcharayan-lake-on-31st-Aug

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை, திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வரும் 31ஆம் தேதி பார்வையிட உள்ளார்.

கடந்த மாதம் 27ம் தேதி கட்சராயன் ஏரியைப் பார்வையிட சென்றபோது ஸ்டாலின் கோவையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை ஏரியை பார்வையிட அனுமதிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஸ்டாலின் ஏரியை பார்வையிட அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஸ்டாலினை பார்வையிட அனுமதிப்பதில் கவுரவ பிரச்னை இருக்கிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்