Published : 27,Aug 2017 02:39 AM
சென்னை வருகிறார் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வர உள்ளார்.
வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் ஆன பின் அவர் சென்னை வருவது இதுவே முதல்முறை. சென்னை வரும் வெங்கையா நாயுடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசவுள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இருப்பதால், அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.