Published : 07,Jan 2022 08:56 PM
தமிழகத்தில் 9 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,981 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 8,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 30,817 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 984 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,08,763 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று தமிழகத்தில் 1,36,620 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் இன்று 4531 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.