Published : 07,Jan 2022 06:39 PM

ராமநாதபுரம்: வாட்டும் வறுமையால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் சிலம்ப வீரர்

சிலம்பம் மற்றும் ஜூடோவில் அசாத்திய திறமை படைத்த ராமநாதபுரம் மாவட்ட வீரர் ஒருவர், வறுமை காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளார்.

பாம்பன் அருகேயுள்ள தங்கச்சிமடம் பகுதியில் லோக சுதன் என்பவர் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாயார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சிலம்பம் மற்றும் ஜூடோ போட்டியில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்ட லோக சுதன், மாவட்ட அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார்.

image

இதன் மூலம் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற போதிலும், குடும்ப வறுமையால் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார சூழலால் கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அரசு நிதியுதவி அளித்தால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று தன்னால் வெற்றிகளை ஈட்ட முடியும் என்று லோக சுதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்