Published : 27,Aug 2017 02:20 AM

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு 4-வது தோல்வி

Patna-pirates-too-strong-for-Tamil-Thalaivas

புரோ கபடி லீக் தொடரில், விறுவிறுப்பான ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில், பாட்னா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. அந்த அணி வீரர் மோனு கோயத் அபாரமாக விளையாடி 11 புள்ளிகள் சேர்த்தார். தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் கை சற்று ஓங்கியிருந்த போதிலும் நேரம் செல்லச் செல்ல ஆட்டம் பாட்னா அணியின் கட்டுக்குள் வந்தது. 
தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாக்குர் சிறப்பாக ஆடி பத்து புள்ளிகள் சேர்த்தார். இருப்பினும், சக வீரர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததால், தமி்ழ் தலைவாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. பாட்னா பைரேட்ஸ் அணி, இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 
ஏழு ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு இது நான்காவது தோல்வியாகும். அந்த அணி 14 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்