Published : 26,Aug 2017 05:14 PM
சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு

வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ராஜீவ் கொலைக் குற்றவாளி முருகன், உண்ணாவிரத்தைக் கைவிட மறுத்துவிட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனிடம், சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் முருகன், தான் ஜீவசமாதி அடைய விரும்புவதாக கூறி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, சிறைத்துறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார். உணணாவிரதத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.