Published : 07,Jan 2022 10:49 AM

ஜனவரியில் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

Tasmac-closed-for-3-days-in-Tamilnadu

ஜனவரியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருக்கும் தகவலில், “டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி 15, ஜனவரி 18, ஜனவரி 26 ஆகிய 3 நாட்கள் மூடப்படுகிறது. ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 18 - வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாள், ஜனவரி 26 - குடியரசு தினம் ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: "புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன்?" - தினகரன் கேள்வி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்