சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இணையதளத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் படத்தைப்பற்றியும், அஜீத்தை பற்றியும் விமர்சனம் செய்தது சினிமாதுறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோலிசோடா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன், விவேகம் படம் பற்றி தரக்குறைவாகவும், தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், விவேகம் படம் பற்றி விமர்சனம் செய்ததற்கு இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில். ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விவேகம் படத்தில் பல காட்சிகள் பிரம்மாண்டமாக, ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர். படக்குழுவினரின் உழைப்பை விமர்சனம் என்கிற பெயரில் சில வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி விடக்கூடாது. அவரது விமர்சனம், அஜித்தையும் , அவரது ரசிகர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அமைந்துள்ளது. சினிமாவையும், சினிமாதுறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்