Published : 05,Jan 2022 10:14 PM

கோவையில் கொரோனாவும், டெங்குவும் நாளுக்குநாள் அதிகரிப்பு

Corona-and-dengue-increasing-simultaneously-in-Coimbatore

கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 42 பேரில் 32 பேர் குழந்தைகளாக இருப்பதால், பெற்றோர் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 நாட்களாக 100ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதே வேளையில் டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு என அண்டை மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 பேர் குழந்தைகள். டெங்குவை தடுக்க வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது என கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

image

கோவையில் 31 பேர், ஈரோடு 4 பேர், திருப்பூர் 5 பேர், திண்டுக்கல், பாலக்காட்டில் தலா ஒருவர் என கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டெங்கு பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் டெங்கு பரவல் காணப்படும் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ முகாம் அமைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்