Published : 05,Jan 2022 08:22 PM

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் தொற்று-தமிழகத்தில் 5000த்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு

Daily-corona-positive-cases-reached-5-thousand-in-Tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 2,731 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 4,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் தற்போது பாதிப்பு 2,481ஆக உயர்ந்திருக்கிறது. 1,17,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 4,862ஆக உள்ளது. கொரோனாவால் இன்று 9 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,814ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,577 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 688 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,07,058 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்