[X] Close

திரையரங்குகள் முதல் திருமண நிகழ்வுகள் வரை.. அரசு அனுமதிக்கும் செயல்பாடுகள்! - முழுவிவரம்

கொரோனா வைரஸ்

Things-which-Tamilnadu-government-allows-during-lockdown

தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் பிற திரிபு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிறு முழு ஊரடங்கும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தின் போது கட்டுப்பாடுகளுடன், சில செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அப்படியான கட்டுப்பாடுகளுடனான செயல்பாடுகள் குறித்த முழு விவரம், இங்கே:

  • உணவகங்கள், விடுதிகள், சமையல் கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும்.

image


Advertisement
  • கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
  • உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
  • அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

image

  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இவற்றில் ஞாயிறு முழு ஊரடங்கின்போது, பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் மட்டும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களும், அந்த நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இவையன்றி இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: கொரோனா ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது? - முழுவிவரம்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close